பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தகுதி தேர்வு நடத்திய மக்கள்: பாஸ் செய்தால் தான் ஓட்டு

ரூர்கேலா: ஒடிசாவில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கிராம மக்கள் தகுதி தேர்வு வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் வரும் 16 முதல் 24ம் தேதி வரை 5 கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. சுந்தர்கர் மாவட்டம், குத்ரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாலுபாடாவில் 18ம் தேதி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடக்கிறது. இதில், போட்டியிடுபவர்கள் அந்த  பதவிக்கு தகுதியானவர்கள் தானா என்பதை சோதிக்க அப்பகுதி கிராம மக்கள் முடிவு செய்தனர். அதற்காக, களத்தில் நிற்கும் 9 வேட்பாளர்களையும் நேற்று முன்தினம்  அழைத்தனர். அதில், 8 பேர் மட்டுமே வந்தனர். அவர்களுக்கு  எழுத்து தேர்வு வைக்கப்பட்டது. 7 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளிக்க 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. அதில், முதல் 15 நிமிடத்தில் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். அடுத்த 15 நிமிடங்களில் எழுத்து மூலம் பதில் எழுத வேண்டும். தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான காரணங்கள், சமூக சேவை செய்த விவரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த தேர்வு முடிவு 17ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவருக்கு மட்டுமே வாக்களிக்க, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். …

The post பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தகுதி தேர்வு நடத்திய மக்கள்: பாஸ் செய்தால் தான் ஓட்டு appeared first on Dinakaran.

Related Stories: