165வது வார்டில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் வாக்குறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 165வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத், வார்டு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று ஆதம்பாக்கம் குன்றக்குடி நகர், நிலமங்கை நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘என்னை வெற்றி பெற செய்தால் ஆதம்பாக்கம் பகுதியில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைப்பேன். மழைநீர் கால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்படும். தினசரி சுகாதார பணிகள் நடைபெறும்,’’ என்றார்.வாக்கு சேகரிப்பின் போது, ஆலந்தூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் ஆதம் ரமேஷ், திமுக முன்னாள் கவுன்சிலர் ஆர்.பாபு, மாவட்ட பிரதிநிதி லியோ பிரபாகரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மோகனசுந்தரம், லட்சுமி மோகன், அவை தலைவர் நாகராஜ சோழன், ஜி.ரமேஷ், என்.எஸ்.டி.கிறிஸ்டோபர், வழக்கறிஞர் ஆனந்தகுமார், பால்ராஜ், கணேசன், சரவணன், இ.பாலாஜி, ஆர்.நிர்மல்குமார், சிவலிங்கம், கண்ணன், பச்சையப்பன், வினோத், ஆர்.பெருமாள், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் பி.எஸ்.ராஜ், எஸ்.வடிவேல், லயன் காமராஜ், ஐ.செல்வம், சுரேஷ் ஸ்ரீராம், எஸ்.ரமேஷ், ஜெய்கணேஷ், மதிமுக சார்பில் கராத்தே பாபு, ஜி.திருநா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

The post 165வது வார்டில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: