ஆற்றுகாலில் 17ம் தேதி விழா ரோட்டுல பொங்கல் கேரளா அரசு தடை: வீடுகளில் மட்டுமே வைக்க அறிவுரை

திருவனந்தபுரம்: உலகப்  பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கியது. விழாவின் 9வது நாளான வரும் 17ம் தேதி பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. வழக்கமாக கேரளா, தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதியில் இருந்தும் பல லட்சம் பெண்கள் ஆற்றுகாலில் குவிந்து பொங்கலிடுவார்கள். இதனால், பொங்கல் நாளில் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்துவிடும். இந்நிலையில், கடந்த வருடம் கொரோனா பரவலால் பொது இடங்களில் பொங்கலிட அனுமதிக்கப்படவில்லை. மக்கள் வீடுகளிலேயே பொங்கலிட்டனர். இந்த வருடமும் பொது இடங்கள், சாலைகள், தெருக்களில் பொங்கலிட, கேரள அரசு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் குறையாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், மற்ற கோயில்கள், வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் 25 சதுர அடிக்கு ஒருவர்  மட்டுமே பங்கேற்க கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது….

The post ஆற்றுகாலில் 17ம் தேதி விழா ரோட்டுல பொங்கல் கேரளா அரசு தடை: வீடுகளில் மட்டுமே வைக்க அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: