காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய 1536 அலுவலர்கள் நியமனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய 1536 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 156 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய 384 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 3,64,086 பேர் வாக்களிக்க உள்ளனர்.மாவட்டத்தில் ஒரு குழுவுக்கு 8 பேர் வீதம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்  காஞ்சிபுரம் நகராட்சிக்கு 2 மற்ற இடங்களுக்கு தலா ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை கண்காணிக்க இணை இயக்குநர், துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் உள்ளூர் தேர்தல் பார்வையாளர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு 1536 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி காஞ்சிபுரத்தில் உள்ள  தனியார் பள்ளியில் நடந்தது. அதில், 872 அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளும் முறை, வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 872, குன்றத்தூர் நகராட்சியில் 212, மாங்காடு நகராட்சியில் 176, உத்திரமேரூர் பேரூராட்சியில் 108, வாலாஜாபாத் பேரூராட்சியில் 168 பேர் பணியாற்ற உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய 1536 அலுவலர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: