185வது வார்டு திமுக வேட்பாளரை ஆதரித்து 186வது வார்டு திமுக வேட்பாளர் மணிகண்டன் வாக்குசேகரிப்பு

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலம், 185வது வார்டு திமுக வேட்பாளர் ஷர்மிளா தேவி திவாகரை ஆதரித்து, பெருங்குடி 186வது வார்டு திமுக வேட்பாளரும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான ஜெ.கே.மணிகண்டன் உள்ளகரம் பெரியார் தெரு, ராஜாஜி தெரு, இளங்கோ தெரு, இந்திரா தெரு, காமராஜர் தெரு போன்ற பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது மணிகண்டன், தான் இந்த பகுதியில் மாநகராட்சி கவுன்சிலராக இருந்த போது மழைநீர் கால்வாய் பணி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை நிறைவேற்றி தந்துள்ளதால் இந்த பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஷர்மிளா தேவி திவாகருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, வட்ட செயலாளர் ஜெ.திவாகர், மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரகுமார், விநாயகம், ஜெயக்குமார், நாகேஷ் மற்றும் பாலகுமரன், ஆர்.வி.ஆர்.மனோகர், ஜவகர், மகளிரணி தனபாக்கியம், ஆராயி, மலர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்….

The post 185வது வார்டு திமுக வேட்பாளரை ஆதரித்து 186வது வார்டு திமுக வேட்பாளர் மணிகண்டன் வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: