தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விண்வெளித்துறைக்கு தேவையான கருவிகளின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும். கப்பல்கட்டும் துறையை மேம்படுத்த பிரத்யேக நிறுவனம் வெகுவிரைவில் தொடங்கப்படும். முருங்கை ஏற்றுமதி, சாகுபடி கட்டமைப்புக்காக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ரூ.5.59 கோடியில் புதுவசதி மையம் ஏற்படுத்தப்படும். நெல்லையில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
The post தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.
