சிபுசோரன் மறைவையொட்டி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: எதிர்க்கட்சியினர் முழக்கத்தால் மக்களவை 2மணி வரை ஒத்திவைப்பு!!

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதேவேளை, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. அவை கூடியதும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேவேளை, மாநிலங்களவையில் அவை கூடியதும், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படது. இதையடுத்து மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

The post சிபுசோரன் மறைவையொட்டி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: எதிர்க்கட்சியினர் முழக்கத்தால் மக்களவை 2மணி வரை ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: