கருப்பர் கோயிலில் ஆடிப்படையல் விழா

 

துவரங்குறிச்சி, ஆக.4: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள உசிலங்காட்டு கருப்பர் கோயிலில் 8 ஊர் பொதுமக்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழா ஆடிப்படையல் விழா. விழாவையொட்டி உசிலங்காட்டு கருப்பருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டன. தொடர்ந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் கஞ்சநாயக்கன்பட்டி, செட்டியபட்டி, ராசிபட்டி, சிங்கிலி பட்டி , வடக்கு எல்லை காட்டப்பட்டி, தெற்கு எல்லைக்காட்டுப்பட்டி முத்துநாயக்கன்பட்டி ,காவல்காரன்பட்டி ஆகிய எட்டு ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி உசிலங்காட்டு கருப்பசாமிக்கு 20க்கும் மேற்பட்ட ஆடுகளை அறுத்து கோவில் வளாகத்திலேயே சமையல் செய்து இப்பகுதி பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

The post கருப்பர் கோயிலில் ஆடிப்படையல் விழா appeared first on Dinakaran.

Related Stories: