எடப்பாடிக்கு 109 வகை உணவுடன் நயினார் மெகா சைவ விருந்து: அதிமுக, பாஜ தலைவர்களும் பங்கேற்பு

நெல்லை: அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் இரு நாட்கள் பிரசார சுற்றுப் பயணத்திற்காக கடந்த 2ம் தேதி இரவு நெல்லை வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் நெல்லையில் உள்ள பிரபல ஓட்டலில் ஓய்வெடுத்தார். அதிமுகவின் ஒரே கூட்டணி கட்சியான பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று இரவு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. விருந்து உபசரிப்பின் போது பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 109 வகையான உணவு வகைகளை ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு டேபிள், நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இந்த விருந்தில் வெஜ் சூப் உள்பட 8 வகையான சூப்கள், சாலட், குழிப்பணியாரம், அரிசி மற்றும் சிறுதானிய உணவு வகைகள், கிரேவிகள், ரொட்டி வகைகள் உள்பட 109 வகையான சைவ உணவு வகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஜ, அதிமுக கட்சி நிர்வாகிகளிடையே ஒற்றுமையை பலப்படுத்தும்
வகையில் சிறப்பு விருந்து நடந்தது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.ஆர் விஜயபாஸ்கர், சண்முகநாதன், இசக்கி சுப்பையா, ராஜலட்சுமி, ஆர்.பி.உதயகுமார், பாஜ மாநில ஒருங்கிணைப்பாளர் கேசவவிநாயகம், முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விருந்தை தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை நெல்லை தனியார் விடுதியில் உள்ள அரங்கத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

The post எடப்பாடிக்கு 109 வகை உணவுடன் நயினார் மெகா சைவ விருந்து: அதிமுக, பாஜ தலைவர்களும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: