திருவெறும்பூர், ஆக.3: திருவெறும்பூரில் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு அரசு மதுபானங்களை விற்றவரை எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து 171 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருச்சி எஸ் பி செல்வநாகரத்தினம் தனிப்படை எஸ்ஐ வரதராஜன் பெருமாளுக்கு திருவெறும்பூரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அதிரடியாக சோதனை செய்ததோடு, அங்கு கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்த திருவெறும்பூரை சேர்ந்த ராமு (70) என்பவரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து 171 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ராமுவையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
The post திருவெறும்பூரில் மதுபாட்டில் பதுக்கி விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.
