- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- திண்டிவனத்தில்
- திமுக
- சென்னை
- சரிதா
- மதுரை
- ஜனாதிபதி
- முதல் அமைச்சர்…
- திண்டிவனம் டி.எம்.கே.
- தின மலர்
சென்னை: சாலை விபத்தில் மரணமடைந்த திண்டிவனத்ைத சேர்ந்த சரிதாவின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் குடும்ப நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மதுரையில் கடந்த ஜூன் 1ம் தேதி நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்த குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்” என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில், கடந்த 2.6.2025 அன்று திமுக உறுப்பினரான சரிதா, தனது சொந்த ஊரான இறையனூர் கிராமத்தில் செல்வதற்கு திண்டிவனத்தை கடந்து சென்றபோது, செயின்ட் ஜோசப் பள்ளி எதிரே உள்ள சர்வீஸ் சாலை பக்கத்தில் இருசக்கர வாகனம் மோதி, தலையில் பலத்த அடிபட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவரது குடும்ப நிவாரண நிதியாக, ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சரிதாவின் கணவர் எஸ்.கண்ணனிடம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் வழங்கினார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், அன்வர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post சாலை விபத்தில் மரணமடைந்த திண்டிவனம் திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.
