×

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 92,626 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பிப்பு

 

சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 92,626 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த நவம்பர் 4ம் தேதி எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கின. டிசம்பர் 4ம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடைய இருந்தன. ஆனால், படிவங்கள் பெறுவதற்கான அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 14ம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டன. டிசம்பர் 19ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தன. எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தமிழ்நாட்டில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தோர், இரட்டை பதிவு என 97.37 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15.18 சதவீதமாகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 92,626 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனங்கள் குறித்து 1,007 பேர் படிவம் 7 விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். வாக்குச்சாவடி முகவர்கள் சார்பில் 2 படிவங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Kerala ,West Bengal ,S.R. ,
× RELATED சென்னையில் தங்கம் விலை இன்று இரண்டு...