- கிறிஸ்துமஸ்
- புதிய ஆண்டு
- ஈரோடு-நாகர்கோவில்
- சென்னை
- சேலம்
- தெற்கு ரயில்வே நிர்வாகம்
- ஈரோடு
- காட்பாடி
- திருச்சி
- மதுரை
சேலம்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்து இயக்குகிறது. இந்தவகையில், ஈரோட்டில் இருந்து சேலம், காட்பாடி, சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியே நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஈரோடு-நாகர்கோவில் சிறப்பு ரயில் (06025) நாளை (23ம் தேதி) மற்றும் 30ம் தேதி இயக்கப்படுகிறது. ஈரோட்டில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து, ஜோலார்பேட்ைட, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் வழியே நாகர்கோவிலுக்கு அடுத்தநாள் மதியம் 1.15 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், நாகர்கோவில்-ஈரோடு சிறப்பு ரயில் (06026), நாளை மறுநாள் (24ம் தேதி) மற்றும் 31ம் தேதி இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு அடுத்தநாள் மாலை 5.27 மணிக்கு வந்து, ஈரோட்டிற்கு இரவு 8.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
