புதுடெல்லி:சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது உரைக்கான யோசனைகளை வழங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி நேற்று கூறியிருப்பதாவது: இந்த ஆண்டின் சுதந்திர தினத்தை நாம் நெருங்கிவரும் நிலையில் எனது நாட்டின் குடிமக்களிடமிருந்து கருத்துக்களை அறிவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்!
இந்த ஆண்டின் சுதந்திர தின உரையில் எந்த மையப்பொருள் அல்லது கருத்துகள் பிரதிபலிப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களின் எண்ணங்களை மைகவ், நமோ செயலி ஆகிய தளங்களில் பகிருங்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
The post சுதந்திர தின உரை பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு appeared first on Dinakaran.