தொடர்ந்து இரு போட்டிகள் டிரா ஆனதால், கார்ல்சன், 3-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தார். அதன் பின் நடந்த 2வது செட் போட்டிகளில் ஒன்றில் கார்ல்சன் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து நடந்த போட்டியில் அபாரமாக ஆடிய கார்ல்சன் வெற்றி வாகை சூடினார். அடுத்ததாக நடந்த போட்டியிலும் கார்ல்சனே வென்றார். கடைசியில், கார்ல்சன், 4 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி கணக்கில் முன்னிலை வகித்தார். அதனால், அபார வெற்றி பெற்ற கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஈஸ்போர்ட்ஸ் உலக செஸ்: அலிரெஸாவை வீழ்த்தி கார்ல்சன் சாம்பியன்
- ஈஸ்போர்ட்ஸ் உலக செஸ்
- கார்ல்சென்
- அலிரெசா
- ரியாத்
- மேக்னஸ் கார்ல்சன்
- கிராண்ட் மாஸ்டர்
- அலிரெசா ஃபிரூஸ்ஜியா
- இ-ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை
- சவூதி அரேபியா
- ரியாத், சவுதி அரேபியா
- நார்வே
- ஈரான்
- பிரான்ஸ்
