அந்த வகையில், இந்த மாதம், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.34.50 குறைந்து ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிசம்பரில் ரூ.1,980-க்கு விற்பனை செய்து வந்த வணிக பயன்பாடு சிலிண்டர், தற்போது ரூ.201 வரை குறைந்து ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டில் மார்ச் மாதம் மட்டும் ரூ.5.50 அதிகரித்து இருந்தது. மற்ற மாதங்களில் விலை குறைந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
The post சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.34.50 குறைந்து ரூ.1,789க்கு விற்பனை! appeared first on Dinakaran.
