இவை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நகரங்களை மேம்படுத்தவும் உதவுகின்றன.
சென்னை மாநகராட்சி முதன்முறையாக ரூ.205.64 கோடி மதிப்பில் பசுமை பத்திரங்களை வெளியிடுகிறது. இந்தப் பணம் கொடுங்கையூர் குப்பை மேட்டில் 252 ஏக்கர் நிலத்தை மீட்கும் பயோமைனிங் திட்டத்திற்கு பயன்படும். மொத்த திட்டச் செலவு ரூ.640.83 கோடி. இதில் மாநகராட்சியின் பங்கு ரூ.385.64 கோடி. இதில் ரூ.205.64 கோடி பசுமை பத்திரங்கள் மூலமும், ரூ.180 கோடி ஜெர்மனியின் கேஎஃப் டபுள்யூ வங்கி கடன் மூலமும் திரட்டப்படும்.
பசுமை பத்திரங்கள் மற்ற நகரங்களில் பெரிய வெற்றி பெற்றுள்ளன. இந்தூர் (5.91 மடங்கு), பிம்ப்ரி-சின்ச்வாட் (5.13 மடங்கு) ஆகியவை பசுமை பத்திரங்களுக்கு பெரும் வரவேற்பை பெற்றதால், சென்னையிலும் ஆர்வம் இருக்கும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது. இது மாநகராட்சியின் இரண்டாவது பத்திர வெளியீடு, முதல் பசுமை பத்திரம். அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.100 கோடிக்கு ரூ.10 கோடி ஊக்கத்தொகை கிடைக்கும். இத்திட்டம் மாநில அரசின் ஒப்புதலுக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும். முன்னதாக, மே மாதம் ரூ.200 கோடி பத்திரங்கள் 7.97% வட்டியில் 10 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக வெளியிடப்பட்டன.
The post ரூ.205.64 கோடி மதிப்பில் பசுமை பத்திரங்கள்: சென்னை மாநகராட்சி முதல் முறையாக வெளியிடுகிறது appeared first on Dinakaran.
