துவரங்குறிச்சி, ஜூலை 31:துவரங்குறிச்சி அருகே வயலில் ஊர்ந்து வந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மணியங்குறிச்சி அருகே உள்ள காட்டுப்பட்டியில் சிவமணி என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இந்த வயலுக்கு நேற்று காலை சிவமணி சென்றார்.
அப்போது வயலில் இரை தேடி 12 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது. இதை பார்த்த சிவமணி, துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் வனத்துறையினரை வரவழைத்து மலைப்பாம்பை ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
The post துவரங்குறிச்சி அருகே வயலில் 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது appeared first on Dinakaran.
