வாணி போஜன் ஆசை நிறைவேறியது

விக்ரம் பிரபு, வாணி போஜன் நடித்துள்ள படம், ‘பாயும் ஒளி நீ எனக்கு’. கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ளார். தர் ஒளிப்பதிவு செய்ய, இசை அமைப்பாளர் மணிர்சர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இசை அமைத்துள்ளார். வரும் 23ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து விக்ரம் பிரபு கூறுகையில், ‘நம் கண்களுக்கு தெரியும் ஒரு விஷயம் உண்மையாகவும் இருக்காது, கண்ணுக்கு தெரியாத விஷயம் தவறாகவும் இருக்காது என்பதை வைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

இதில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. ஹீரோயின் வாணி போஜன் சிறப்பாக நடித்துள்ளார். என்னுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. கன்னட ஹீரோ தனஞ்ஜெயா வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் சிறந்த அனுபவமாக இருக்கும். ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசியின் 9 சண்டைக்காட்சிகள் அதிரடியாக இருக்கும். இதுவரை நான் நடித்த படங்களில், இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாகும்’ என்றார்.

The post வாணி போஜன் ஆசை நிறைவேறியது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: