தூக்க கலக்கத்தில் ஓட்டிவந்தபோது லாரி மீது பைக்கை மோதிய எஸ்ஐ படுகாயம்

சேத்துப்பட்டு, ஜூலை 26: சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சிவக்குமார். இவர் நேற்று பகல் முழுவதும் வேலை பார்த்து மீண்டும் இரவு ரோந்து பணி மேற்கொண்டார். பைக்கில் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் சென்று மீண்டும் சேத்துப்பட்டு வரும்போது அதிகாலை தூக்க கலக்கத்தில் சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எஸ்ஐ சிவகுமார் ஓட்டி வந்த பைக் மோதியதில் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

The post தூக்க கலக்கத்தில் ஓட்டிவந்தபோது லாரி மீது பைக்கை மோதிய எஸ்ஐ படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: