மேலும், இதே போட்டியில் வயது வகை பிரிவில் ஐபிஎஸ் அதிகாரி மயில்வாகனன் தலைமையில் சென்ற 6 இன்ஸ்பெக்டர்கள், 1 சப்-இன்ஸ்பெக்டர், ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 4 தலைமை காவலர் மற்றும் 3 ெபண் தலைமை காவலர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் 19 தங்கம், 11 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அமெரிக்காவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மயில்வாகனன் உள்பட அனைத்து போலீசாரையும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை ஐஜி விஜயகுமாரி, ஐஜி பிரவீன் குமார் அபினபு ஆகியோர் உடனிருந்தனர்.
The post அமெரிக்காவில் நடந்த விளையாட்டு போட்டி இந்திய அணி சார்பில் தமிழக போலீசார் 50 பதக்கங்களை வென்றனர்: டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு appeared first on Dinakaran.
