அதேபோல சரவணப் பொய்கையில் கோயில் யானை தெய்வானை குளிப்பதற்கு நீச்சல் குளமும் உள்ளது. தற்போது கோயிலில் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சரவணப் பொய்கை குளமும் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் உள்ள தாமரைப்பூ, கார்த்திகை பெண்கள் போன்ற சிற்பங்கள் புனரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இன்னும் சில தினங்களில் பக்தர்கள் சரவண பொய்கை குளத்தை பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post திருச்செந்தூர் சரவணப்பொய்கை குளம் புனரமைப்பு: விரைவில் பக்தர்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.
