ஜிம்பாப்வேயுடன் டி20 தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வேயில், தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர் வெஸ்லி மதவெரே 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின் வந்தோரில் கிளைவ் மடாண்டே 8, கேப்டன் சிக்கந்தர் ராஸா 9, தஷிங்கா முஸெகிவா 0, டோனி முன்யோங்கா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு துவக்க வீரர் பிரையன் பென்னட் மட்டும் சிறப்பாக ஆடி 43 பந்துகளில் 61 ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே, 6 விக்கெட் இழந்து 144 ரன் எடுத்தது.

பின், 145 ரன் இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. துவக்க வீரர்கள் லுவான் ட்ரெ பிரெடோரியஸ் 4, ரீஸா ஹென்றிக்ஸ் 6 ரன்னில் வீழ்ந்து அதிர்ச்சி அளித்தனர். இருப்பினும் கேப்டன் ராஸி வான்டெர் துஸென், ரூபின் ஹெர்மான் இணை அபாரமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 106 ரன் குவித்தது. ரூபின் 63 ரன்னில் அவுட்டானார். 17.2 ஓவரில் தென் ஆப்ரிக்கா 145 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துஸென், 52 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

The post ஜிம்பாப்வேயுடன் டி20 தென் ஆப்ரிக்கா அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: