இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள கேட் கீப்பர் மற்றும் வேன் டிரைவர் தவிர 11 ரயில்வே துறை அதிகாரிகள் நேற்று விசாரணைக்காக திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விபத்து குறித்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும், யார் மீது தவறு உள்ளது என்பது குறித்தும் சிறப்பு விசாரணை குழுவினர் ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
* தூங்கிய 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட்
கடலூர் விபத்து எதிரொலியாக தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளர் தலைமையிலான குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்- காஞ்சிபுரம் ரயில் மார்க்கத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை ரயில்வே கேட் உள்ள பகுதிகளுக்கு சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தக்கோலம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள ரயில்வே கேட் கீப்பர்கள் பணியின்போது தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை சென்னைக்கு திரும்பி விசாரணை நடத்தினர். பின்னர், தக்கோலம் கேட் கீப்பர் கார்த்திகேயன், சேந்தமங்கலம் கேட் கீப்பர் ஆசீஸ்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
The post கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ரயில்வே அதிகாரிகள் 11 பேரிடம் சிறப்பு குழுவினர் விசாரணை: திருச்சி கோட்ட அலுவலகத்தில் நடந்தது appeared first on Dinakaran.
