தேனி மாவட்டத்தில் போடி நகர் காவல்நிலையம் முதன்மையானதாக தேர்வு

போடி: தேனி மாவட்டத்தில் போடி நகர் காவல் நிலையம் முதன் மை முன்னோடி காவல் நிலையமாக தேர் வாகியுள்ளது.தேனி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் 39 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் போடி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய ஐந்து டிஎஸ்பிகளின் துணைக் கட்டுப்பாட்டில் இக்காவல்நிலையங்கள் இயங்கி வருகின்றன.கடந்த 2020ம் ஆண்டில் குண்டாஸ், கஞ்சா கடத்தல் தடுத்தல், குற்றங்கள் தடுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போடி நகர் காவல்நிலையம் தேனி மாவட்டத்தின் முதன்மையானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் கூறுகையில், காவல்நிலையத்தின் மாண்பு பொதுமக்களின் சட்டம் ஒழுங்கு சேவைக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எந்த வழக்குகள் வந்தாலும் உயரதிகாரிகளின் வழிகாட்டுதலில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுக்கிறது. கஞ்சா கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளில் குண்டாஸ் என நடவடிக் கை, பல வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தது என அதிக மதிப்பெண்கள் சேர்ந்ததால் முதன்மை மற்றும் சிறந்த காவல்நிலையாக தேர்வாகியிருக்கிறது என்றார்….

The post தேனி மாவட்டத்தில் போடி நகர் காவல்நிலையம் முதன்மையானதாக தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: