கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக நடிகர் ஸ்ரீகாந்த்கடந்த மாதம் 23-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து இதே வழக்கில் கடந்த 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இருவரும் சென்னை உயர்நீதிமன்ற வழாகத்தில் இருக்க கூடிய சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியே ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதி ஷர்மேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; காவல்துறை விசாரணைக்கு அழைத்தபோது உரிய ஒத்துழைப்பு அளித்ததாகவும் வாதிட்டார். மேலும் மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்துள்ளதாகவும், கிருஷ்ணாவின் கைது நடவடிக்கை அடிப்படை உரிமை மீறிய செயல் என்றும் வாதிட்டார். மேலும் எதன் அடிப்படையில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார் என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவருடைய வாதத்தில் குறிப்பிட்டார்.
இதேபோல் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; நடிகர் ஸ்ரீகாந்த் இடமிருந்து போதைப்பொருள் எதும் கைப்பற்றப்படவில்லை எனவும், போதைப்பொரூள் பதுக்கிவைத்திருப்பதற்கு, பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது என தெரிவித்தார்.
இந்த இரு மனு விசாரணையிலும் காவல்தூறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனைக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 2 ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
இதனை அடுத்து 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.
