அருமனை: குமரி மாவட்டம் சிற்றாறு அருகே மூக்கரைக்கல் மலை கிராமத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் களியல் வனச்சரக அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் மூக்கரைக்கல் கிராமத்தில் 54க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 30ம் தேதி நள்ளிரவு கிராமத்துக்குள் வந்த யானை மகேந்திரன் என்பவரது வீட்டை சேதப்படுத்தி அச்சுறுத்தி சென்றுள்ளது. யானையால் கிராம மக்கள் நிம்மதியின்றி வாழ்ந்து வருகிறோம்.
எனவே பழங்குடி மக்களின் நலன்கருதி மூக்கரைக்கல் கிராமத்தை சுற்றி காட்டு யானைகள் நுழையாதபடி சூரிய மின்வேலி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
The post சிற்றாறு அருகே யானைகள் நுழைவதை தடுக்க கிராமத்தை சுற்றி மின்வேலி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
