2025-26ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற விதி 110ன் கீழ், அரசு ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன் ஒருபகுதியாக அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் திருமண முன்பணத்தை ரூ.5,00,000 ஆக உயர்த்த முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் வழங்கப்படுகிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சம் உயர்த்தி வழங்கப்படும். மேலும் இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும் மற்றும் இந்த ஆணை வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும். தமிழ்நாடு நிதிக் குறியீட்டில் தேவையான திருத்தம் தனியாக வெளியிடப்படும்.
The post அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் திருமண முன் பணம் ரூ.5 லட்சமாக உயர்வு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
