சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சட்டப்பேரவை உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!!

டெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வாலங்​காடு அடுத்த களாம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவ​காரத்​தில் தனுஷின் 17 வயது தம்​பியை கடத்​தி​யது தொடர்​பாக புரட்சி பாரதம் கட்சி தலை​வரும், கே.​வி.குப்​பம் தொகுதி எம்​எல்​ஏவு​மான பூவை ஜெகன் மூர்த்​தி, போலீஸ் ஏடிஜிபி ஜெய​ராம் ஆகியோர் மீது குற்​றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு மீதான விசா​ரணை​யின் போது, ஏடிஜிபியை கைது செய்ய நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

பூவை ஜெகன் மூர்த்​திக்கு கண்​டனம் தெரி​வித்​தது. இந்த உத்​தரவை எதிர்த்​து, உச்ச நீதி​மன்​றத்​தில் ஏடிஜிபி ஜெய​ராம் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை விசா​ரித்த நீதி​மன்றம், கைது உத்தரவை ரத்து செய்​தும், பூவை ஜெகன்​மூர்த்​தி​யின் முன்​ஜாமீன் மனுவை வேறு அமர்​வுக்கு மாற்​றி​யும் உத்​தர​விட்​டது. இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி போலீ​ஸாருக்கு மாற்​றப்​பட்​டதையடுத்​து, சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணை​யில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

இந்​நிலை​யில், பூவை ஜெகன் மூர்த்​தி​யின் முன்​ஜாமீன் மனுவை கடந்த 27-ம் தேதி சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​து, உத்​தர​விட்​டது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஜெகன்மூர்த்தி மேல்முறையீடு செய்தார். ஆதாரங்கள் இல்லாமல் தன்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்டுள்ளதாகவும் ஜெகன்மூர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சட்டமன்ற உறுப்பினராக, மதிக்கத்தக்க பொறுப்பில் உள்ள தனது பெயரை களங்கப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மனுவில் ஜெகன்மூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை இன்று(ஜூன் 30) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, கோட்டீஸ்வர் சிங் அமர்வு முன் வந்தபோது, பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

The post சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சட்டப்பேரவை உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: