நீலகிரி மாவட்டம் மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மசினகுடி காவல் நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மசினகுடி இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சசிகுமார் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ.மில்கி செகவத் டேனியல், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜான்ஸி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் ஜெர்மினா ஆகியோர் கலந்து கொண்டார்கள். முதுகலை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் துவங்கி மசினகுடி கடைவீதி வரை சென்ற பேரணியில் மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்கள் பவித்ரா, பிரியா, கஸ்துாரி, சித்ரா, குன்னப்பன், டாக்டர் பாண்டியன், செந்தில்குமார், பண்டி, சிவக்குமார், சித்தராஜ் சாந்தினி, பாலாமணி, சிவக்குமார், நாராஜ் மற்றும் மசினகுடி காவல்நிலைய போலீசார் என 300கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பியும் பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் பேசியதாவது, போதை பொருட்கள் பயன் படுத்துவதால் உடலுக்கு மட்டுமின்றி குடும்பம், சமூதாயத்திற்கே பாதிப்பு ஏற்படுகிறது. சுய ஒழுக்கம், மன நலன், தனி மனித வாழ்வு சீரழிகிறது.
போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மன ரீதியாக பாதிப்பு ஏற்படுவதுடன் தூக்கமின்மை, மனச்சோர்வு, எப்போதும் பதட்டமாக இருத்தல், ஞாபக மறதி, வலிப்பு நோய், கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, புற்றுநோய், வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பலவித நோய்கள், பிரச்னைகள் ஏற்படுகிறது.
எனவே போதையால் பாதை மாறிப்போன குடும்ப வாழ்க்கை சின்னாபின்னமாகி சீரழிவதை தவிர்க்க போதை பழக்கத்தை கைவிட வேண்டும். போதை பொருட்கள் இல்லா சமூதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும் எனவும், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் எனவும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
The post மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவ, மாணவிகள் உறுதிமொழி appeared first on Dinakaran.
