இந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே 2025 ஆம் ஆண்டில் அகாடமியின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இந்த நிலையில், சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் விதமாக கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் ஆஸ்கர் அகாடமியில் சேர்வதற்கான அழைப்பை பெற்றுள்ளனர். மேலும் , ஜூன் 26 அன்று, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் அமைப்பு, கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, அரியானா கிராண்டே, பிராண்டி கார்லைல், ஆண்ட்ரூ வாட், பிரான்ஃபோர்ட் மார்சாலிஸ், கோனன் ஓ’பிரையன், ஜிம்மி கிம்மெல் உட்பட மொத்தம் 534 தனிநபர்களை அதன் உறுப்பினர்களாக இணைய அழைத்துள்ளது. இந்த புதிய உறுப்பினர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த மேலும் பல முக்கிய ஆளுமைகள் இடம்பிடித்துள்ளனர்.
The post ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு..!! appeared first on Dinakaran.
