ஒட்டன்சத்திரம், ஜூன் 24: கள்ளிமந்தயம் அருகே லாரி மோதி விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார். கள்ளிமந்தயம் அருகே உள்ள பொருளூர் குப்பாயிவலசை சேர்ந்தவ பழனிச்சாமி (45) விவசாயி. இவர் தனது டூவீலரில், கரியாம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, இவரது டூவீலர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து சம்பவம் குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post லாரி மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.
