அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் கடைசி நாளான நேற்று, 6 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் நஜ்முல் இந்த இன்னிங்சிலும் 125 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதையடுத்து, 296 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 2வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 4 விக்கெட்இழந்து 72 ரன் எடுத்தது. அதனால், போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக, இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய வங்கதேச கேப்டன் நஜ்முல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியுடன் இலங்கை நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மாத்யூஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
The post இலங்கை – வங்கதேசம் இடையே முதல் டெஸ்ட் டிரா: 2 இன்னிங்சிலும் நஜ்முல் சதம் appeared first on Dinakaran.
