அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.67.88 லட்சம் மதிப்பில் 8 டயாலிசிஸ் உபகரணங்கள்

*ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, ரூ.67.88 லட்சம் மதிப்பிலான 8 டயாலிசிஸ் உபகரணங்களை ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வழங்கினர்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் ரூ.67 லட்சத்து 88 ஆயிரத்து 105 மதிப்பிலான 8 டயாலிசிஸ் உபகரணங்களை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலையில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.பூவதியிடம் நேற்று வழங்கினர்.

இதுகுறித்து கலெக்டர் தினேஷ்குமார் பேசுகையில், ‘ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி ரோட்டரி சங்கம், ஓசூர் ரோட்டரி சங்கம், ஓசூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம், சிப்காட் ரோட்டரி சங்கம் சார்பில், ரூ.67 லட்சத்து 88 ஆயிரத்து 105 மதிப்பில் 8 டயாலிசிஸ் உபகரணங்களை வழங்கி உள்ளனர்.

இந்த உபகரணங்களை நல்ல நிலையில் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்கப்படும். இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்கு ரோட்டரி கிளப் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்,’ என்றார்.

நிகழ்ச்சியில், மருத்துவக் கண்காணிப்பாளள் டாக்டர் சந்திரசேகரன், துணை முதல்வர் டாக்டர் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் செல்வராஜ், மது, தினேஷ், ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் சிவக்குமார், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் லோகநாதன், பாபு, பார்த்தீபன், கிருஷ்ணன், சிவராமன், நிவால்டோ மேநிலா, சுரேஷ்குப்தா நவீனா, அரவிந்த், அசோக்நாயுடு, பிரேம்குமார், மகேஷ் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், டயாலிசிஸ் பிரிவு சிறப்பு மருத்துவர், செவிலியர் மற்றும் ரோட்டரி கிளப் மகளிர் குழுவினர், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.67.88 லட்சம் மதிப்பில் 8 டயாலிசிஸ் உபகரணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: