அதற்கு லட்சுமி சம்மதித்துள்ளார். அதன்படி சீமா சாம்பவி, தனது வீட்டில் வைத்து குழந்தையின் பெயரில் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அந்த வீடியோவை லட்சுமிக்கு அனுப்பி வைத்து பணம் வழங்கும்படி கூறினார். உடனே ஆன்லைன் மூலம் ரூ.28 லட்சம் அனுப்பி வைத்தார். ஆனால் பல நாட்களாகியும் குழந்தைக்கு உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. சந்தேகமடைந்த லட்சுமி, சீமா சாம்பவியை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ என வந்தது. அப்போதுதான் பேய் ஓட்டுவதாக கூறி ரூ.28 லட்சத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பாகல்கோட்டை போலீசில் லட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி பெண் சாமியாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
The post 2 வயது குழந்தைக்கு பேய் பிடித்ததாக பூஜை செய்து ரூ.28 லட்சம் மோசடி: பெண் சாமியாருக்கு வலை appeared first on Dinakaran.
