இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தை விரும்பாது என்று டிரம்ப்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்

ஒட்டாவா: இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தை விரும்பாது என்று டிரம்ப்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். ஜி7 மாநாட்டின்போது மோடி – டிரம்ப் சந்திப்பதாக இருந்த நிலையில் முன்னதாகவே அமெரிக்கா டிரம்ப் புறப்பட்டார். இந்நிலையில் இதனையடுத்து தொலைபேசி வழியாக உரையாடல் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் 35 நிமிடங்கள் உரையாடினார்.

அப்போது; தீவிரவாதத்துக்கு எதிராக போரிட அமெரிக்கா துணை நிற்கும் என மோடியிடம் டிரம்ப் உறுதி அளித்ததாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக டிரம்ப்பிடம் பிரதமர் மோடி விரிவாக எடுத்துரைத்தார். ஜி7 மாநாட்டின்போது நேரில் சந்திக்காததால் தொலைபேசியில் இரு நாட்டுத் தலைவர்களும் பேசினர். இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தை விரும்பாது என்று டிரம்ப்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார். சண்டை நிறுத்தத்துக்கு பாக். அழைப்பு விடுத்ததன் பேரில்தான் தாக்குதலை நிறுத்தினோம் என மோடி கூறினார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரை டிரம்ப் இன்று சந்திக்க உள்ள நிலையில் மோடியுடன் பேசியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்றிரவு சந்திக்க உள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கே ருபியோ, பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத்தையும் சந்திக்க உள்ளார். ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பாக். ராணுவ தளபதி அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.

The post இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தை விரும்பாது என்று டிரம்ப்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: