அதனை ஆய்வு செய்த நீதிபதிகள் இதில் உள்ள தகவல்கள் ஒரு அறிக்கையாக உள்ளதே தவிர போதுமானதாக இல்லை. ஆவணங்கள் எங்கே என்ற கேள்வியை முன்வைத்தனர். இதை அடுத்து வீட்டிற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியை முன்வைத்தனர். எப்படி சீல் வைக்கப்பட்டது என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தனர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் வீடு சீல் வைக்கப்படவில்லை என்றும் தங்களை தொடர்பு கொள்ளாமல் கதவை திறக்க வேண்டாம் என்று நோட்டீஸ் மட்டுமே ஒட்டப்பட்டதாக பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அப்படியென்றால் அதற்கு என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பிய நிலையிலே தன்னுடைய வீட்டிற்கு செல்ல அமலாக்கத்துறை அனுமதி தர வேண்டுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறைவழக்கறிஞர் அந்த நோட்டீசை அகற்றிவிடுவதாக கூறினார்கள்.
அமலாக்கத்துறை தரப்பில் தெரிவித்ததற்கு நீதிபதிகள் நோட்டீஸ் ஓட்டுவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில் ஒரு சட்ட விரோத செயல்பட்ட ஒன்றை சட்ட பூர்வமானதாக மாற்ற வேண்டாம் எனில் அதிர்ச்சி தெரிவித்தனர். மேலும் ஆகாஷ் பாஸ்கரன் தலைமையில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் 2014 முதல் 2022 ஆம் வரை ஒரே தேர்தல் என கூறி பார் உரிமையாளர்கள் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும். முறைகேடு நடந்ததாக கூறப்படும் நேரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளிக்கு சென்றிருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் இதை அடுத்து டாஸ்மாக் ஒதுக்கீடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை மாலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு அந்த வழக்கை நீதிபதிவுகள் நாளை ஒத்திவைத்தனர்.
The post டாஸ்மாக் முறைகேடு விவகாரம்; ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக ED கொடுத்த ஆவணங்கள் போதுமானதல்ல: ஐகோர்ட் appeared first on Dinakaran.
