×

நத்தம் அருகே சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து

நத்தம், ஜூன் 14: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (35). லாரி டிரைவர். இவர் கேரளா மாநிலம், திருச்சூரிலிருந்து நேற்று லாரியில் ஓடுகளை ஏற்றிக்கொண்டு, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வழியாக புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

நத்தம் எரமநாயக்கன்பட்டி பிரிவு அருகே நேற்று அதிகாலை வந்தபோது, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இவ்விபத்தில் நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நத்தம் அருகே சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Lorry ,Natham ,Praveen Kumar ,Alankulam, Pudukkottai district ,Thrissur, Kerala ,Thirumayat, Pudukkottai district ,Natham, Dindigul district ,Eramanayakkanpatti… ,Dinakaran ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...