ஒரே நாளில் அடுத்தடுத்து பாம்பன் பாலத்தை கடந்த கப்பல்கள்

ராமேஸ்வரம் : எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல் உட்பட மூன்று கப்பல்கள் பாம்பன் பாலத்தை நேற்று ஒரே நாளில் கடந்து மேற்குவங்க கடல் பகுதிக்குச் சென்றன.கொச்சியில் இருந்து நான்கு சிறிய ரோந்து படகுகளை கொண்ட எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று மேற்குவங்க கடல் பகுதிக்கு செல்வதற்காக மன்னார் வளைகுடா கடல் வழியாக பாம்பன் தெற்கு கடல் பகுதிக்கு வந்தது. நேற்று காலை ஷெர்ஜர் தூக்குப்பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து பாம்பன் துறைமுக அதிகாரிகளின் அனுமதி பெற்று பாம்பன் பாலத்தை கடந்த இக்கப்பல் பாக் ஜலசந்தி கடல் வழியாக மேற்கு வங்கம் கடல் பகுதி நோக்கி சென்றது.இதுபோல் கொச்சியிலிருந்து வந்த மேலும் இரண்டு கப்பல்களும் பாம்பன் பாலத்தை கடந்து பாக் ஜலசந்தி கடல் வழியாக மேற்கு வங்கத்தை நோக்கி சென்றன. சிறிய கால இடைவௌியில் அடுத்தடுத்து மூன்று கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்த சென்றதை பாம்பன் பாலத்தில் நின்றிருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்….

The post ஒரே நாளில் அடுத்தடுத்து பாம்பன் பாலத்தை கடந்த கப்பல்கள் appeared first on Dinakaran.

Related Stories: