×

மாஜி அதிமுக எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்

திருப்பூர், ஜுன் 12: திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ. குணசேகரன் கடந்த 9ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதனைத்தொடர்ந்து ராக்கியாபாளையம் விஜிவி கார்டன் பகுதியில் உள்ள குணசேகரன் இல்லத்தில் எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி, குணசேகரன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம் ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், மகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும், பா.ஜக, தே.மு.தி.க., இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

The post மாஜி அதிமுக எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,Edappadi Palaniswami ,Tiruppur ,Former ,AIADMK ,Tiruppur South ,Gunasekaran ,General Secretary ,Edappadi.K. Palaniswami ,Dinakaran ,
× RELATED பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு