திராவிடத்தின் மூத்த மொழி தமிழ் கால்டுவெல் சொன்ன கருத்தை கமல் கூறியிருப்பது சரியானது: சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை: பாளையங்கோட்டையில் சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி:
தமிழக முதலமைச்சர் சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு எண்ணத்தில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தமிழில் இருந்து தான் கன்னடம் மொழி உருவானது என்ற கமலஹாசன் கருத்து உண்மையானது. திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல் சொன்ன கருத்தை தான் கமல் கூறியிருக்கிறார். திராவிட குடும்பத்திற்கு தலைமை மொழி தமிழ்மொழி. அதனால் தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. அதிலிருந்து தான் மற்ற மொழிகள் உருவாகி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post திராவிடத்தின் மூத்த மொழி தமிழ் கால்டுவெல் சொன்ன கருத்தை கமல் கூறியிருப்பது சரியானது: சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: