இது குறித்து சென்னை மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அவகாசம் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், ஏற்கனவே ரூ.2 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் ரூவரை செலவு செய்து பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பெயர் பலகைகளை மாற்றுவதற்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் சங்கத்தின் கோரிக்கை மனுவை 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். அதுவரை கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The post கடைகளுக்கு தமிழில் பெயர்ப்பலகை வைக்க அவகாசம் கோரி வழக்கு சென்னை மாநகராட்சி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
