அதில் பல்வேறு நிர்வாகிகளை நியமிப்பதற்காக பலரிடம் இருந்து ரூ.25 லட்சம் பணம் வசூல் செய்துள்ளனர். இதில், ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் போலி கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட இருந்த நிலையில் இருவருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், இருவருக்கும் எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்ற பத்திரிகை நேற்று தாக்கல் செய்துள்ளது.
The post முன்னாள் ஜனாதிபதி, ஒன்றிய அமைச்சரின் பெயரில் போலி கடிதங்களை பயன்படுத்தி ரூ.25 லட்சம் மோசடி: சென்னையை சேர்ந்த 2 பேர் மீது சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.
