இப்போதைய நிலைமையில், மற்ற ஆயிரக்கணக்கான வைரஸ் போல இந்த கொரோனா வைரஸ் ஒரு தொற்றாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக அழிக்கப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மற்ற வைரஸ்கள் போல, லட்சக்கணக்கான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் போல கொரோனா தொற்றும் அவ்வப்போது வரும் அது கட்டுப்படுத்தப்படும். கொரோனா தொற்று ஏற்படும்போது நாம் கவனிக்கப்படக் கூடியது, யார் பாதிப்படைகிறார்கள்? எந்த பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது? எந்த அளவிற்கு வீரியம் இருக்கிறது? இதனால் மரணங்கள் ஏற்படுகிறதா? உள்ளிட்டவை ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதே போல, மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையை பார்க்க வேண்டும். ஒரு லட்சம் மக்கள் தொகை இருக்கும் இடத்தில் 10 நபர்களுக்கு வருவதும், 10 லட்சம் நபர்கள் இருக்கும் இடத்தில் 10 நபர்களுக்கு வருவதை பெரிதாக கருத வேண்டியதில்லை. நம்மைப் போன்று 7.8 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் 10 நபர்களுக்கு தொற்று ஏற்படுவதை ஒன்றாக கருத முடியாது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இதுவரை உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து அல்லது ஒன்றிய அரசிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் கொரோனா தொடர்பாக வரவில்லை. தமிழகத்தில் சுகாதாரத் துறை கட்டமைப்பு, அதாவது மருந்து, மாத்திரை, பரிசோதனை, படுக்கை என அனைத்து வசதிகளும் உள்ளன. இது பற்றி பயப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை appeared first on Dinakaran.
