நாகர்கோவில், மே 21: தேசிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து குமரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் தி.க. மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், திமுக ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் பால்சிங், மதிமுக உயர் மட்ட குழு மாநில துணை அமைப்பாளர் ராணி செல்வின், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். இசக்கிமுத்து, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சந்துரு, திராவிட நட்பு கழக மாவட்ட பொறுப்பாளர் விஷ்ணு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவதாணு, திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் அய்சக் நியூட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நாகர்கோவிலில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
