தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷ்மா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் ரேஷ்மா தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் ராஜேஸ்வரி பாராட்டினார். மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ரேஷ்மாவின் அப்பா முத்துக்குமார் புதியம்புத்தூர் ஊராட்சியில் தூய்மை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
அவரது தாய் முத்து செல்வி டெய்லராக வேலை செய்து வருகின்றனர். இது குறித்து மாணவி ரேஷ்மா கூறுகையில், ‘பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன் படித்ததால் தான் 498 மதிப்பெண்கள் பெற முடிந்தது. டாக்டர் ஆவது எனது கனவு’ என்றார்.
The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தூய்மை காவலரின் மகள் மாநில அளவில் இரண்டாமிடம் appeared first on Dinakaran.
