தர்மபுரி, மே 16: தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டி பரம்வீர் பானாசிங் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர் திவாகர் 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம், மாணவர் சஞ்சய் 587 மதிப்பெண்கள் பெற்று 2வது இடம், மாணவர் கோபிநாத் 559 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்கள் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 11 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 25 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேரும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பரம்வீர் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜேஷ், நிர்வாக இயக்குனர் கீதா ராஜேஷ், பள்ளி முதல்வர் கார்த்திகேயன், நிர்வாக அலுவலர் மாயக்கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
The post பரம்வீர் பானாசிங் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.
