மது போதையில் நீச்சல் அடிப்பதாக கூறி ஊட்டி ஏரியில் குதித்து தத்தளித்த நபரால் பரபரப்பு

*துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய படகு ஓட்டிகள்

ஊட்டி : ஊட்டி ஏரியில் மது போதையில் நீச்சல் அடிப்பதாக குதித்து தத்தளித்த நபரை துரிதமாக செயல்பட்டு படகு ஓட்டிகள் காப்பாற்றினர். நீலகிரி மாவட்டம், ஊட்டி மத்திய பஸ் நிலையம் பின்புறமும் ஊட்டி ஏரி அமைந்துள்ளது.

இதில் சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு அடுத்தபடியாக படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருந்த போது தேனிலவு படகு இல்லம் அருகே ஒருவர் ஏரி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் படகில் சுற்றுலா பயணிகளை படகு சவாரி அழைத்துச்சென்ற படகு ஓட்டிகள் இந்த நபர் தத்தளித்து கொண்டிருந்த இடத்திற்கு விரைவாக படகை செலுத்தி அவரை மீட்டனர். அப்போது, மதுபோதையில் இருந்த அந்த நபர் எனக்கு நீச்சல் தெரியும். என்னை நீச்சல் அடிக்க விடுமாறு கேட்டுள்ளார்.

படகு ஓட்டிகள் அவரை காப்பாற்றி படகில் ஏற்றி மீண்டும் கரையில் வந்து இறக்கி விட்டனர். மது போதையில் ஊட்டி படகு இல்லத்தில் நீச்சல் அடித்து சாகசம் செய்ய முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மது போதையில் நீச்சல் அடிப்பதாக கூறி ஊட்டி ஏரியில் குதித்து தத்தளித்த நபரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: