இதனால் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், பெப்சி அமைப்புக்கு எதிராக சில தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர். அதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறி பெப்சி அமைப்பினர் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது சட்ட விரோதமானது. இதன் காரணமாக ஏப்ரல் 8ம் தேதி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பு பணிகள் முற்றிலும் முடங்கி, மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தப்படி படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்துக் கொடுக்குமாறு பெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும். படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளில் தலையிட பெப்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பெப்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் பதிலளிக்க அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்காத விவகாரம் பெப்சி மீது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வழக்கு: திரைத்துறை சங்கங்கள் பதில் தர ஐகோர்ட் அவகாசம் appeared first on Dinakaran.
