ஓசூர், மே 8: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று ஓசூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக மாவட்ட அவை தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா ஆகியோர் வாக்குச்சாவடி முகவர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். சூளகிரியில் வேப்பனஹள்ளி தொகுதிக்கும், தேன்கனிக்கோட்டையில் தளி தொகுதிக்குமான திமுக வாக்குச்சாவடி முகவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் வடிவேல், முன்னாள் எம்எல்ஏ முருகன், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஞானசேகரன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சீனிவாசன், வீராரெட்டி, சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், டேக்ஸ் கமிட்டி தலைவர் சென்னீரப்பா, மண்டல குழு தலைவர்கள் ரவி, காந்திமதி கண்ணன், மாநகர நிர்வாகிகள் செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.
